சீர்காழி அருகே எருக்கூர் வடிகால் வாய்க்காலின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே கடுக்காமரம் கிராமத்திலிருந்து பிரதான புதுமண்ணியாறு பாசன வாய்க்காலில் இருந்து எருக்கூர் வடிகால்வாய்க்கால் பிரிந்து எருக்கூர் வழியாகச் சென்று 4 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பிறகு அங்குள்ள பாசன வாய்க்காலில் கலக்கிறது.